உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை வருமானம் 152.38 கோடி: கடந்த ஆண்டை விட 15. 64 கோடி ரூபாய் அதிகம்

சபரிமலை வருமானம் 152.38 கோடி: கடந்த ஆண்டை விட 15. 64 கோடி ரூபாய் அதிகம்

சபரிமலை: டிச.26-ல் நிறைவு பெற்ற இந்த ஆண்டுக்கான மண்டல காலத்தில் சபரிமலை வருமானம் 152.38 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது கடந்த ஆண்டை விட 15.64 கோடி ரூபாய் அதிகமாகும். கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதனால் தேவசம்போர்டின் வருமானமும் அதிகரித்துள்ளது. டிச.26 நடை அடைத்த போது சபரிமலையின் மொத்த வருமானம் 152 கோடியே 38 லட்சத்து 34 ஆயிரத்து 268 ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டு 136 கோடியே 73 லட்சத்து 97 ஆயிரத்து 296 ரூபயாக இருந்தது. முக்கிய வருமான விபரங்கள் வருமாறு. கடந்த ஆண்டு வருமானம் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அரவணை ரூ.66.77 கோடி [52.32], அப்பம் ரூ.11.91 கோடி [10.19], காணிக்கை ரூ.51.74 கோடி [52.45], அபிேஷகம் ரூ.1.45 கோடி [1.47]. கரன்சி பிரச்னையை தொடர்ந்து பக்தர்கள் இ காணிக்கை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் நான்கு லட்சத்து 65 ஆயிரத்து 741 ரூபாய் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !