உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ஜன.5ல் உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஜன.5ல் உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 5ல் உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம் நடக்கிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவம், வரும், 5ல், சுவாமி சன்னதி முன் உள்ள தங்க கொடி மரத்தில், காலை, 7:35 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில், விநாயகர், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன் ஆகியோர், தங்க கொடி மரம் முன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். இதை தொடர்ந்து, மார்கழி மாதம் முடியும் வரை, தினமும் காலை, இரவு நேரத்தில், சுவாமி மாட வீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !