உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழ அலங்காரத்தில் வேதநாராயண பெருமாள் அருள்பாலிப்பு!

பழ அலங்காரத்தில் வேதநாராயண பெருமாள் அருள்பாலிப்பு!

பெண்ணாடம்: பெண்ணாடம் வேதநாராயண பெருமாள் சுவாமி, பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்ணாடம் மேற்குரத வீதி, வீற்றிருந்த பெருமாள் கோவிலில் உள்ள வேதவல்லி தாயார் சமேத வேதநாராயண பெருமாளுக்கு அதிகாலை 4:30 மணியளவில் நடை திறப்பு, 5:00 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, ஆப்பிள், ஆரஞ்சு, வாழை, திராட்சை, மாதுளை, எலுமிச்சை, பப்பாளி உள்ளிட்ட பழங்களால் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !