உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்து சுவாமிகளுக்கு ஜன.,1 வெள்ளிக் கவசம்

குன்றத்து சுவாமிகளுக்கு ஜன.,1 வெள்ளிக் கவசம்

திருப்பரங்குன்றம்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு (ஜன. 1) திருப்பரங்குன்றம் கோயிலில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளிக் கவசம் சாத்துப்படியாகிறது.திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் காலை 6 மணிக்கு குபேர மகாலட்சுமி பூஜைகள் நடக்கிறது. மீனாட்சி அம்மனுக்கு வெள்ளி கவசம் சாத்துப்படியாகிறது. ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் காலை 6:30 மணிக்கு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது. மூலவர் பாலமுருகனுக்கு வெள்ளிக் கவசம் சாத்துப்படியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !