உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை பாதுகாப்பு பயணம்

சபரிமலை பாதுகாப்பு பயணம்

மதுரை: கேரளாவில் பெரியாறு புலிகள் சரணாலயம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. கோயில் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த அம்மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2011ல் தடை விதித்தது. இதை கேரள உயர்நீதிமன்றமும் 2015ல்
உறுதி செய்தது.

இது பற்றி பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர் ஆர்.காந்தி மற்றும் பல்வேறு தரப்பைச் சேர்ந்த 20 பக்தர்கள் மதுரையிலிருந்து புறப்பட்டனர். "பசுமையை காப்போம், சபரிமலையை காப்போம் வாசகங்கள் அடங்கிய ஆடை அணிந்து தேக்கு, சந்தனம், மரக்கன்றுகளை கொண்டு செல்கின்றனர். அவற்றை பத்தனம்திட்டா கலெக்டரின் பிரதிநிதியிடம் பம்பாவில் ஒப்படைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !