உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருகே சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை அருகே சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, 13ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சோழர்கள் காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே, தென்கரும்பலூர் கிராமத்தில், தென்பெண்ணை ஆற்றங்கரை உள்ளது. இங்கு, விவசாயிகள் கரும்பு விவசாயம் செய்துள்ளனர். இந்த நிலத்தின் பல இடங்களில், சிதிலமடைந்த பழங்கால கோவில்கள், கற்சிலைகள், தூண்கள் ஆகியவை மண்ணில் புதைந்த நிலையில், அவ்வப்போது கிடைத்து வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பாண்டுரங்கன்,
இரண்டு நாட்களாக அப்பகுதியில் ஆய்வு செய்தார். அங்கு, மண்ணில் மறைந்திருந்த கல்வெட்டுகளை பொதுமக்கள் உதவியுடன் தோண்டி எடுத்தார். கல்வெட்டுகளில் இருந்த ஓவியம், எழுத்துகளை ஆய்வு செய்தபோது, தென்கரும்பலூர், தண்டராம்பட்டு பகுதிகளில், 13ம்
நூற்றாண்டில் சோழ மன்னர்கள் ஆட்சி செய்ததும், மேலும், கோவில் அர்ச்சகர்களுக்கு அப்பகுதியில் தேவையான நிலத்தை நன்கொடையாக வழங்கியதும் தெரிய வந்தது. கல்வெட்டுகளை மாவட்ட நிர்வாகம் பாதுகாத்திட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !