திண்டிவனம் அனுமந்த் ஜெயந்தி கொண்டாட்டம்
ADDED :3252 days ago
திண்டிவனம்: திண்டிவனம் கன்னிகாபரமேஸ்வரி கோவிலில், அனுமந்த் ஜெயந்தி விழா நடந்தது. திண்டிவனம் வாசவி கிளப், வாசவி கிளப் வனிதா சார்பில், அனுமந்த் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில் வளாகத்திலுள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணைய் காப்பு மற்றும் வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், தலைவர்கள்
நவநீதகிருஷ்ணன், கோமதி, செயலாளர்கள் நடராஜன், ஜெயந்தி, பொருளாளர்கள் நாகராஜன், பாரதி, துணை ஆளுநர் சிவக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், மாவட்ட தலைவர்கள் மனவளக்கலை பிரபாகரன் வைத்தீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.