படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ரூ.4.66 லட்சம் வசூல்
ADDED :3252 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே, பிரசித்தி பெற்ற படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவில் உள்ளது.
கோவிலில், மூன்று மாதத்திற்கு ஒரு முறை உண்டியல் பணம் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, டிச., 30 அறநிலையத்துறை ஆய்வாளர் நடராஜன், கோவில் செயல் அலுவலர் நடராஜன் ஆகியோர் முன்னிலையில் உண்டியலில் இருந்த காணிக்கை எண்ணப்பட்டது. இதில்
பழைய, 1,000 ரூபாய் நோட்டுகள் 12, 500 ரூபாய் நோட்டுகள் 32, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் 18, 500 ரூபாய் நோட்டுகள், எட்டு என, மொத்தம், நான்கு லட்சத்து 66 ஆயிரத்து 439 ரூபாய், தங்கம், 43 கிராம், வெள்ளி, 90 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.