உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா கோவில்களில் 31ம் தேதி படித்திருவிழா

ஷீரடி சாய்பாபா கோவில்களில் 31ம் தேதி படித்திருவிழா

திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில்களில், டிச., 31ம் தேதி, படித்திருவிழா மற்றும் புத்தாண்டு தரிசனம் நடைபெறுகிறது.

திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இடங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், வரும் டிச., 31ம் தேதி படித்திருவிழா மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று காலை மூலவருக்கு பாலாபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை, 4:00 மணிக்கு உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மாலை, 5:00 மணி முதல், இரவு, 10:30 மணி வரை படித்திருவிழாவையொட்டி, பஜனை குழுவினரின் பக்தி பாடல்கள் பாடப்படும். தொடர்ந்து, நள்ளிரவு, 12:00 மணி வரை, பக்தி இன்னிசை கச்சேரியும், 12.01க்கு, ஆங்கில புத்தாண்டையொட்டி, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !