உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளிப்பட்டு ஹனுமந் ஜெயந்தி விமரிசை

பள்ளிப்பட்டு ஹனுமந் ஜெயந்தி விமரிசை

பள்ளிப்பட்டு: ஹனுமந் ஜெயந்தி, இரண்டாவது நாளாக டிச.,30 விமரிசையாக கொண்டாடப்பட்டது. செந்துார காப்பில் அருள்பாலித்த சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அமாவாசை திதியை கொண்டு, நேற்று முன்தினமும், டிச.,30 பகல் 12:18 வரையிலான மூலம் நட்சத்திரத்தை கணக்கிட்டு, ஹனுமந் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. வங்கனுார், ஆர்.கே.பேட்டை, பந்திகுப்பம் உள்ளிட்ட இடங்களில் டிச.,30 முன்தினம் ஹனுமந் ஜெயந்தி
கொண்டாடப்பட்ட நிலையில், பள்ளிப்பட்டு வீர ஆஞ்சநேயர் மலைக்கோவிலில் டிச.,30 சிறப்பு உற்சவம் நடந்தது. காலை 7:30 மணிக்கு, அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது, தொடர்ந்து செந்துார காப்பு மற்றும் மலர் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பள்ளிப்பட்டு, ஈச்சம்பாடி, புதுபட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள், மலைக்கோவிலில் அனுமனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !