காளஹஸ்தி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.54.39 லட்சம்
ADDED :3252 days ago
நகரி: வாயுலிங்கேஸ்வரர் கோவில் உண்டியலில், 15 நாட்களில், 54.39 லட்சம் ரூபாய் ரொக்கம், 202 கிலோ வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
சித்துார் மாவட்டம், காளஹஸ்தி, வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 15 நாட்களில், பக்தர்கள் உண்டியல்களில் அளித்த காணிக்கை, கோவில் அதிகாரி பிரம்மராம்பா முன்னிலையில், நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில், 54 லட்சத்து, 39 ஆயிரத்து, 292 ரூபாய் ரொக்கம், 202 கிலோ வெள்ளி ஆகியவை இருந்தன.