மேல்மருவத்தூர் பக்தர்கள் மாமல்லபுரத்தில் குவிந்தனர்
ADDED :3252 days ago
மாமல்லபுரம்: தமிழகம் மற்றும் பிற மாநில ஆதிபராசக்தி பக்தர்கள், மாமல்லபுரம் கடலில் குளிக்க குவிகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்துாரில், சித்தர் பீட ஆதிபராசக்தி அம்மன் கோவில், பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில பக்தர்களும் வழிபடுகின்றனர். சித்திரை பவுர்ணமி, ஆடி மாத வழிபாடு, தைப்பூசம் உள்ளிட்ட உற்சவ விழாக்களின்போது, பக்தர்கள், இங்கு குவிகின்றனர். இந்நிலையில், இக்கோவிலில் வழிபடும் முன், ஸ்தலசயன பெருமாள் சுவாமி வீற்றுள்ள மாமல்லபுரம் கடலில் நீராடி வருமாறு, பக்தர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. உற்சவ காலமான தற்போது, மேல்மருவத்துாரில் வழிபட, பல்வேறு பகுதிகளிலிருந்து குவியும் பக்தர்கள், மாமல்லபுரம் கடலிலும் நீராடுகின்றனர்.