மாமல்லபுரம் கோவில் உண்டியல்களில் ரூ.24 லட்சம் காணிக்கை
மாமல்லபுரம்: மாவட்டத்தின் முக்கிய கோவில்களின் உண்டியல் திறக்கப்பட்டது. அதில், 24 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில், 2 லட்சத்து, 14 ஆயிரத்து, 540 ரூபாய், மாரி சின்னம்மன் கோவிலில், 3 லட்சத்து, 12 ஆயிரத்து, 387 ரூபாய், 2 கிராம் தங்கம், 65 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. செங்கல்பட்டில், ஏகாரம்பரேஸ்வரர் கோவில், சிங்கபெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்மப் பெருமாள் கோவில், செட்டிப்புண்ணியம் ஹயக்ரிவர் கோவில், அனுமந்தபுரம் அகோர வீரபத்திர சுவாமி கோவில்களின் உண்டியல் திறக்கப்பட்டு, ஊழியர்களால் எண்ணப்பட்டது.
அதில், செங்கல்பட்டில், 1.15 லட்சம் ரூபாயும், சிங்கபெருமாள்கோவிலில், 5.80 லட்சம் ரூபாயும், செட்டிப்புண்ணியத்தில், 3.50 லட்சம் ரூபாயும், அனுமந்தபரத்தில், 3.90 லட்சம் ரூபாயும், என, 14.35 லட்சம் ரூபாய் ரொக்க காணிக்கையாக உண்டியல் மூலம் கிடைத்தது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், 12 உண்டியல்களின் காணிக்கையாக, 4.80 லட்சம் பணமாகவும், நான்கரை கிராம் தங்கமும், 55 கிராம் வெள்ளியும் கிடைத்தது.