உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூவத்தூர் திருவாலீஸ்வரருக்கு கோவில் கும்பாபிஷேகம் எப்போது?

கூவத்தூர் திருவாலீஸ்வரருக்கு கோவில் கும்பாபிஷேகம் எப்போது?

கூவத்துார்: கூவத்துார் திருவாலீஸ்வரர் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிஷேகத்தை நடத்த, கோரிக்கை எழுந்துள்ளது.

லத்துார் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலையில், கூவத்துார் பகுதியில் பழமையான திருவாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின் திருப்பணிகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலில், விநாயகர், முருகன் தனித்தனி சன்னிதிகளும் திருக்காலீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தனித்தனி சன்னிதிகளும் உள்ளன. இச்சன்னிதி விமானங்களின் திருப்பணிகளும், புதிதாக கட்டப்பட்டுள்ள ராஜகோபுர திருப்பணிகளும் முடிவுற்ற நிலையில், பிற வேலைகள் மந்த கதியில் நடைபெறுவதாக பக்தர்களும், பகுதிவாசிகளும் கூறுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் கோவில் திருப்பணி வேலைகளை முடித்து, கோவில் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !