பவானி மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
ADDED :3252 days ago
பவானி: காளிங்கராயன்பாளையம் மாரியம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டம், பவானி, காளிங்கராயன்பாளையம் சாலையில் உள்ளது மாரியம்மன் கோவில். இங்கு கடந்த 20ல், பொங்கல் விழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி டிச.,30 இரவு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள், உலக நன்மை மற்றும் குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி, அம்மனை வழிபட்டு, விளக்கு பூஜை செய்தனர். ஜன., 4ல், பொங்கல் வைபவம் நடக்கிறது.