உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை சுற்று வட்டார கோவில்களில் உண்டியல் திறப்பு

சென்னிமலை சுற்று வட்டார கோவில்களில் உண்டியல் திறப்பு

சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்துக்கு உட்பட்டு, சென்னிமலை சுற்று வட்டாரத்தில், பத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இவற்றில், நகரப் பகுதியில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டும் உண்டியல் வைக்கப்பட்டுள்ளன. அங்கு டிச.,30 உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பிராட்டி அம்மன் கோவிலில், 55 ஆயிரத்து, 419 ரூபாய், மேலப்பாளையம் அலமேலு மங்கை ஆதிநாராயண பெருமாள் கோவிலில், 71 ஆயிரத்து, 526 ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. பெருந்துறை ஆய்வாளர் ஜெயமணி,
செயல் அலுவலர் அருள்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !