உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் ரூ.28.84 லட்சம் உண்டியல் வசூல்

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.28.84 லட்சம் உண்டியல் வசூல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 28.84 லட்சம் ரூபாய் வசூலானது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் 7 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் திறந்து எண்ணப்படுகிறது. இதன்படி நவ., முதல் டிச., வரையிலான 2 மாதத்தில் 5வது முறையாக டிச.,30 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் 28 லட்சத்து 84 ஆயிரத்து 884 ரூபாய், தங்கம் 21 கிராம், வெள்ளி 2 கிலோ 490 கிராம் காணிக்கையாக கிடைத்தது. கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், மேலாளர் லெட்சுமிமாலா, பரமக்குடி இந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் கோயில் ஊழியர்கள் எண்ணினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !