திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் சுவாமி வீதியுலா
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் 2017ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு தங்ககாக்கை வாகனத்தில் சனிபகாவன் வீதியுலா நடந்தது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர கோவிலில் சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால் நாள் தோறும் ஆயிரக்கணக்கிலும்,வார சனிக்கிழமைகளில் சனிபகவானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.இக்கோவிலில் நேற்று முன்தினம் 2017ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் முருகன், விநாயகர், அம்பாள், சிவன் மற்றும் சனிபகவான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மழை,விவசாயம் உள்ளிட்ட அனைத்து நலமுட இருக்கவேண்டி புனித தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின் புத்தாண்டுவரவேற்க சனிஸ்வர பகவான் கோவிலில் தங்ககாக்கை வாகனத்தில் சனிபகவான் சிறப்பு அலங்காரத்தில் தீபாரதனை மற்றும் வீதியுலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,கட்டளை தம்பிரான் சுவாமி, எஸ்.பி.,குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.