உலகளந்த பெருமாள் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
திருக்கோவிலுார்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருக்கோவி லுார் உலகளந்த பெரு மாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருக்கோவி லுார் உலகளந்த பெரு மாள் கோவிலில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.நள்ளிரவு வழிபாடு இல்லை என்றபோதிலும், ஏகாதசி பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் உலகளந்த பெருமாள் வைரஅங்கி சேவையில் விஸ்வரூபதரிசனமாக காட்சியளித்தார். 5:00 மணிக்கு பொதுஜனசேவை, 6:00 மணிக்கு நித்யதிருவாராதனம், திருப்பாவை சாற்றுமறை, காலை 10:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார் சமேத சேகளீச பெருமாள் கண்ணாடிஅறை மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உலா நடந்தது. இரவு 9:00 மணிக்கு சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளினார். ஆங்கில புத்தாண்டு என்பதால் கோவில்நடை நாள்முழுவதும் திறந்திருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாசரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.