உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கூடலழகர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா

மதுரை கூடலழகர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா

மதுரை: மதுரை கூடலழகர் கோயில் உதவி கமிஷனர் அனிதா கூறியதாவது: வைகுண்ட ஏகாதசி விழா ஜன.,8ல் நடக்கிறது. அன்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்படும். 3:30 மணிக்கு விஸ்வரூபம் வைகுண்டநாதர் திருக்கோலத்தில் பெருமாள் எழுந்தருளுவார். காலை 8:00 மணிக்கு ரா.ஹம்சப்பிரியாவின் வாய்ப்பாட்டு கச்சேரி. காலை 10:00 மணிக்கு சத்குரு சங்கீத வித்யாலயம் இசை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஐஸ்வர்யா, மாணவிகள் நிவேதா, அனுப்பிரியா ஆகியோரின் பரதநாட்டியம். மாலை 4:30 முதல் இரவு 7:00 மணி வரை யாம் குழு ஜே.ஜே. சகோதரிகளின் பக்தி இசை. இரவு 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கடையநல்லுார் பிரகாஷ் குழுவின் நாம சங்கீர்த்தனம். இரவு 7:30 மணிக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம். இரவு 7:15 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு திருவாராதனம் நடக்கிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !