கந்த பெருமான் பல்லக்கு உற்சவம் நிறைவு
ADDED :3200 days ago
அய்யன்பேட்டை: அய்யன்பேட்டை கந்த பெருமான் பல்லக்கு உற்சவம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது. காஞ்சிபுரம் அடுத்த, அய்யன்பேட்டை கிராமத்தில், கந்தப்பார் தெருவார்களுக்கு சொந்தமான கந்த பெருமான் கோவில் உள்ளது. ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை, கந்த பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து, உற்சவர் கந்த பெருமான் பல்லக்கில் எழுந்தருளி, கிராமம் முழுவதும் ஊர்வலம் வந்தார். இந்த ஊர்வலம் நேற்று முன்தினம் மாலையுடன், விழா நிறைவு பெற்றது. இந்த உற்சவத்திற்கான ஏற்பாடுகளை, அந்த தெருவாசிகளே செய்திருந்தனர்.