கோவில் கழிப்பறைக்கு பூட்டு; ’அவசரத்திற்கு’ பக்தர்கள் தவிப்பு
ADDED :3313 days ago
பழையசீவரம்: லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் கழிப்பறை கட்டடம், போதிய பராமரிப்பு இன்றி பூட்டிய நிலையில் இருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பழையசீவரம் கிராமத்தில், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், சுற்றுலா வளர்ச்சி திட்டத்தில் கழிப்பறை வசதி உள்ளது. கட்டப்பட்ட சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்ததாகவும், சில ஆண்டு களாக பூட்டிய நிலையில் உள்ளதாகவும், புகார் எழுந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இயற்கை உபாதையை கழிக்க, திறந்த வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.