உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரை

பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரை

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியை சேர்ந்த பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை சென்றனர். கோத்தகிரி பாலமுருகன் பக்தர் குழுவினர், ஆண்டுதோறும், பழநி முருகன் கோவிலுக்கு பாதயாத்தரை செல்கின்றனர். அதன்படி, கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜைகள் செய்து, 20வது ஆண்டு பாதயாத்திரை பயணத்தை பக்தர்கள் துவக்கினர். பாலமுருகன் பக்தர்கள் குழு தலைவர் வடிவேல் தலைமையில், பெண்கள் உட்பட, 118 பக்தர்கள், காவடி எடுத்து, கோத்தகிரியில் இருந்து, மேட்டுப்பாளையம், அன்னுார், சோமனுார், தாராபுரம் வழியாக, செல்லும் பக்தர்கள், ஆறாம் தேதி கோவிலை அடைகின்றனர். பாதயாத்திரை குழுவினரை, கோவில் நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் வழியனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !