3 கோவில் நிலத்தில் மரங்கள் மறு நடவு
ADDED :3199 days ago
திருப்பூர்: அவிநாசி அவிநாசிபாளையம் வரையிலான, என்.எச்.,ரோடு விரிவாக்கம் பணிக்காக, 1,402 மரங்கள் அகற்றப்பட உள்ளன. மறு நடவுக்கு சாத்தியமுள்ள மரங்கள் வேருடன் எடுத்து நடவு செய்வதற்கு, ‘வெற்றி’ அமைப்பு முன் வந்துள்ளது. கடந்த வாரம், 130 வயதுடைய மூன்று ஆலமரங்கள், வேருடன் எடுத்து வந்து, கலெக்டர் அலுவலகத்தில் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகம், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் மற்றும் அலகு மலை முருகன் கோவில் வளாகத்தில், மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பக்தர்கள் குழுவினர், மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.