உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஸ்தீக சமாஜம் சார்பில் ராதா கல்யாண மகோத்ஸவம்

ஆஸ்தீக சமாஜம் சார்பில் ராதா கல்யாண மகோத்ஸவம்

கோவை : ’ஆஸ்தீக சமாஜம்’ சார்பில், 13வது ஆண்டு ராதா கல்யாண மகோத்ஸவம் மற்றும் நாம பிரசார வைபவம் இடையர் பாளையம் வி.ஆர்.ஜி., மஹாலில் துவங்கியது. தொடர்ந்து, ஜன., 8ம் தேதி வரை நடக்கிறது. ஆஸ்தீக சமாஜம் சார்பில், கோவையில் ஒவ்வொரு ஆண்டும், ராதா கல்யாண மகோத்ஸவம் நடைபெறும். இந்த ஆண்டு, 13வது ஆண்டாக கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. ஜன., 2, காலை 5:30 மணிக்கு, ராமகிருஷ்ண கனபாடிகள், மகாகணபதி ஹோமம் நிகழ்த்தினார். மாலை 6:00 மணிக்கு தோடைய மங்களம், குருகீர்த்தனைகள், அஷ்டபதிபஜனை நடந்தது. ஜன., 3ல், உடையாளூர் கல்யாணராம பாகவதர் குழுவினர், காலை 9:30 மணிக்கு, ஸ்ரீ கிருஷ்ணலீலா தரங்கினியும், மாலை 3:30 மணிக்கு, மைதிலி ராமநாதன் குழுவினரின் நாராயணீயம் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று, உடையாளூர், கல்யாணராம பாகவதரின், கிருஷ்ணலீலா தரங்கினி, கணபதிராமபாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தன இசை நிகழ்ச்சி, தியானம், திவ்யநாமம், டோலோத்சவம் ஆகிய இசை நிகழ்ச்சிகள் நடந்தன. ஜன., 8ம் தேதி வரை, பக்தி இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !