கடலுாரில் மார்கழி மாத பஜனோற்சவம்
ADDED :3201 days ago
கடலுார்: கடலுாரில் சங்கர பக்த ஜனசபா சார்பில் மார்கழி மாத பஜனோற்சவம் வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. கடலுார் ஸ்ரீசங்கர பக்த ஜனசபா சார்பில் கடலுார் நகரில் 75 ஆண்டுகளாக மார்கழி மாதத்தையொட்டி பொதுமக்கள் நன்மை வேண்டி அதிகாலையில் பாடலீஸ்வர் கோவிலை வலம் வந்து பஜனோற்சவம் நடப்பட்டு வருகிறது. இந்தாண்டு கடலுார் ஸ்ரீசங்கர பக்த ஜனசபா சார்பில் முரளிதரர் சிஷ்யர் மஞ்சக்குப்பம் கார்த்திக் குழுவினர் நேற்று பாடலீஸ்வரர் கோவிலை வலம் வந்து மார்கழி மாத பஜனோற்சவம் செய்தனர். நிகழ்ச்சியில் நிர்வாகி ராஜா பாகவதர், திருமலை, செயலர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். பஜனோற்சவம் வரும் 13ம் தேதி வரை நடக்கிறது.