குமரன்குன்று கோவிலில் வெயிலில் வாடும் பக்தர்கள்
அன்னுார்: குமரன்குன்று சுப்பிரமணியசாமி கோவிலில் கூரை அமைக்க அனுமதி கோரி பக்தர்கள் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அன்னுார் – மேட்டுப்பாளையம் இடையே உள்ளத குமரன்குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு கோவில் மண்டபத்தின் முன்புறம், வராந்தாவில், 60 அடிக்கு 60 அடி அளவில் பந்தல் கூரை அமைக்கப்பட்டிருந்தது. நான்கு மாதங்களுக்கு முன் அறநிலையத்துறை அதிகாரிகள் ஓலை பந்தல் கோவிலில் கூடாது, என்று கூறி அதை அகற்றி விட்டனர். இதையடுத்து பந்தல் போடப்படவில்லை. இதனால், கோவிலு க்கு வரும் பல ஆயிரம் பக்தர்கள் மண்டபத்தின் முன்புறம் வெயிலில் வாடி நிற்கின்றனர். பக்தர்கள் கூறுகையில்,‘கோவிலின் முன்புறம், 60 அடிக்கு 60 அடி அளவில், கான்கிரீட்டில் மேற்கூரை அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. பல முறை அறநிலைய த்துறை அலுவலகத்தில் நேரிலும், தபால் முலமாகவும் கோரியும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்,’ என்றனர்.