பகவதியம்மன் கோவில் திருவிழா
ADDED :3202 days ago
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே யுள்ள லிங்க கவுண்டன் வலசில், பிரசித்திபெற்ற பகவதியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. கடந்த டிச., 27ல், பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தினமும் காலை, மாலைகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கடந்த மாதம், 31ல், பொதுமக்கள் காவிரி ஆற்றிலிருந்து, தீர்த்தம் எடுத்து வந்தனர். பொங்கல் திருவிழா, மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இரவில் அன்னூர் பஜனை குழுவின் சார்பில், நாம சங்கீர்த்தன கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது.