உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமண மகரிஷி ஜெயந்தி விழா ரமண கேந்திரம் ஏற்பாடு

ரமண மகரிஷி ஜெயந்தி விழா ரமண கேந்திரம் ஏற்பாடு

மதுரை, மதுரை ரமண கேந்திரம் சார்பில் ரமண மகரிஷியின் 137 வது ஜெயந்தி விழா தருமை ஆதீனம் மடத்தில் ஜன.,7 முதல் ஜன.,12 வரை நடக்கிறது. மதுரை ரமண கேந்திரம் செயலாளர் ஏ.கொண்டல்ராஜ் கூறியதாவது: துவக்க நாளான ஜன.,7ல் மாலை 6:00 மணிக்கு குற்றாலம் மாண்டிசரி பள்ளி மாணவர்களின் ரமண இன்னிசை, தயானந்த கல்லுாரி முன்னாள் முதல்வர் பிரணதார்த்திஹரனின் பக்தி சொற்பொழிவு. ஜன., 8ல் மாலை 6:00 மணிக்கு கலாராணி ரங்கசாமி ராமேஸ்வரி மாணவர்களின் ரமண நாட்டிய, நாடகம், ரமண வித்யா பீடம் நர்மதாவின் பக்தி சொற்பொழிவு. ஜன.,9ல் மாலை 6:30 மணிக்கு அனந்தகிருஷ்ணன் குழுவின் ரமண இன்னிசை, பேராசிரியை கலாராணி ரெங்கசாமியின் பக்தி சொற்பொழிவு. ஜன.,10ல் மாலை 6:30 மணிக்கு ஜெய ராஜாமணி மாணவ, மாணவியரின் ரமண இன்னிசை, சிதம்பர குற்றாலத்தின் பக்தி சொற்பொழிவு. ஜன.,12ல் காலை 6:00 மணிக்கு ஸ்ரீரமண மந்திரம், மார்கழி பாராயணம், வேத பாராயணம், அன்னதானம் நடக்கிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !