குன்னுார் குழந்தை ஏசு சிற்றாலய திருவிழா
ADDED :3202 days ago
குன்னுார் : குன்னுார் மாடல் ஹவுஸ் பகுதியில் உள்ள குழந்தை ஏசு சிற்றாலயத் திருவிழா, இன்று மாலை, 6:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை துவங்கி, வரும், 12ம் தேதி வரை தினசரி மாலை, 6:30 மணிக்கு, நவநாள் வழிபாடு நடத்தப்படுகிறது. 13, 14 ஆகிய தேதிகளில், மாலை, 6:00 மணிக்கு, நவநாள், திருப்பலி நடத்தப்படுகிறது. திருவிழா நாளான, 15ம் தேதி, காலை, 11:30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடத்தப்பட உள்ளது. திருப்பலியை தொடர்ந்து, தேர்பவனி, திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் ஆகியவை நடத்தப்பட உள்ளன. மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும், 16ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு திருப்பலியை தொடர்ந்து, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, பங்கு குருக்கள், பங்கு மக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் செய்து வருகின்றனர்.