மூலநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :3209 days ago
பாகூர்: மூலநாதர் சுவாமி கோவிலில், பாகூர் போலீசார் சிறப்பு வழிபாடு செய்தனர். பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், ஆங்கில புத்தாண்டு தினத்தன்று, பாகூர் போலீசார் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, புத்தாண்டு தினமான நேற்று பாகூர் போலீசார், மூலநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னதாக, அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதில், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், வீரன், உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயபால், திருமால், சவரி, ஏட்டு அங்காளன், கான்ஸ்டபிள்கள் மற்றும் ஊர்காவல் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.