ஆர்.கே.பேட்டை பெருமாள் கோவில் கருட சேவை
ஆர்.கே.பேட்டை: வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, ஜன.8 காலை சொர்க்க வாசலில் எழும்பும் விஜயராகவ பெருமாள், மாலையில் கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பள்ளிப்பட்டு அடுத்துள்ளது விஜயராகவபுரம். இந்த கிராமத்தில் கொற்றலை ஆற்றங்கரையை ஒட்டி, அமைந்துள்ளது விஜயவள்ளி உடனுறை விஜயராகவ பெருமாள் கோவில். கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான இந்த கோவிலுக்கு, அருகில் உள்ள சொரக்காய்பேட்டை, மேலப்பூடி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் இருந்தும், ஆந்திர மாநிலம் நகரி, சிந்தலபட்டடை, நாராயணவனம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஜன.8 வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, அதிகாலை, 3:00 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் சிறப்பு உற்சவம் துவங்குகிறது. 4:30 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. காலை, 6:30 மணி முதல், 10:00 மணி வரை சுவாமி சொர்க்கவாசலில் எழுந்தருளுகிறார். 11:00 மணிக்கு, திருக்கல்யாண
வைபவம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, கருட வாகனத்தில் சுவாமி உள் புறப்பாடு எழுந்தருளுகிறார். 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும்.