உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகணபதி கோவிலில் இன்று சண்டியாக பூஜை

ராஜகணபதி கோவிலில் இன்று சண்டியாக பூஜை

ஈரோடு: ஈரோடு கொல்லம்பாளையம், குப்புசாமி காலனி விக்ஞ ராஜகணபதி கோவிலில் இன்று காலை 6 மணிக்கு சண்டியாகம் பூஜை நடக்கிறது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு விநாயகர் பூஜையை தொடர்ந்து, கணபதி ஹோமம், தீபாராதனை, மாலை 5 மணிக்கு மிருத்சங்கரஹணம், அங்குரார்ப்பனம், ரஷ்ஷாபந்தனம், துர்காலஷ்மி, சரஸ்வதி, மஹா சண்டி கும்பஸ்தாபனம், உடன்பூஜை, தீபாராதனை ஆகியவை நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு லட்சுமி சுதர்னயாகம், நவக்கிரஹயாகம், சத்ருசம் ஹாரயாகம், மஹா மிருத்துஞ்சயாகம் நடந்தது. இன்று காலை 6 மணிக்கு சண்டியாகம் ஆரம்பம், கலச பூஜை, அபிஷேகம் அலங்காரம், அர்ச்சனை நடக்கிறது. பூஜையில் கலந்து கொள்வதன் மூலம் தடைபட்ட திருமணங்கள் விரைவில் நடக்கும். ராகு, கேது, செவ்வாய் தோஷங்கள், களத்ரதோஷம், காலசர்ப்ப தோஷங்கள் நீங்கும். புத்ர சந்தான சவுபாக்கியம் கிடைக்கும். வியாபாரம் செழிக்கவும், தொழில் உத்தியோகம் கிடைக்கும். கல்வியில் நல்ல அபிவிருத்தி அடைந்து, நற்பேறும் புகழும் கிடைக்கும் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !