உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலையில் சிறப்பு ஹோமம்

ஆனைமலையில் சிறப்பு ஹோமம்

ஆனைமலை : ஆனைமலை குளத்துப்புதூரில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை சிறப்பு ஹோமங்கள் நடக்கவுள்ளன. ஆனைமலை அடுத்த குளத்துப்புதூரில் ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் 50வது பட்டம் ஸ்ரீ ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் அனுக்கிரகத்தாலும், திருக்கோட்டியூர் ஸ்ரீமாள் உ.வே. மாதவன் சுவாமிகள் ஆசியோடும் சிறப்பு ஹோமங்கள் நடைபெறுவது வழக்கம். நாளை (15ம் தேதி) திருக்கோட்டியூர் ஸ்ரீமாள் உ.வே.எஸ்.வெங்கடேச சுவாமிகளால் சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !