உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கட்ரமணர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

வெங்கட்ரமணர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்தனர். தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கட்ரமணர் சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். வெங்கட்ரமணருக்கு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் செய்து பக்தர்கள் வழி பட்டனர்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், சோழங்குனம் மேல்தாங்கல் வெங்கடேசபெருமாள் கோவிலில் அதிகாலை 5.00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசபெருமாளுக்கு ஊஞ்சல் உற்சவம் செய்தனர். இதில் பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !