உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட சேவை உற்சவம் நாயக்கன்பேட்டையில் பரவசம்

கருட சேவை உற்சவம் நாயக்கன்பேட்டையில் பரவசம்

நாயக்கன்பேட்டை : நாயக்கன்பேட்டை, ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலன் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி, முதலாம் ஆண்டு கருட சேவை உற்சவம், நேற்று கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த நாயக்கன்பேட்டை கிராமத்தில், ருக்மணி-சத்யபாமா சமேத வேணுகோபாலன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு ஏகாதசி விழாவை ஒட்டி, புதிதாக செய்துள்ள கருட வாகனத்தில், உபநாச்சியாருடன் வேணுகோபாலன் நேற்று காலை, 5:00 மணிக்கு எழுந்தருளினார். அதை தொடர்ந்து, வீதியுலா நடந்தது. கிராமவாசிகள் துாப தீப ஆராதனை செய்து வேணுகோபாலனை வழிபட்டனர். முன்னதாக, நேற்று முன்தினம் மாலை, கரிக்கோலம் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !