பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்: ஆடல் வல்லானுக்கு அபிஷேகம்!
ADDED :3234 days ago
கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.
ஆருத்ரா தரிசன விழாவையொட்டி அதிகாலை முதல் நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தேன், நெய், பழ வகைகள், பால், தயிர், நெய், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் காட்சியளித்தார். நடராஜர், சிவகாமியம்மனுடன் சப்பரத்தில் எழுந்தருளி, பட்டி சுற்றுதல் மற்றும் தேரோடும் வீதிகளில் உலா வந்து அருள்புரிந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.