உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கல்யாண வைபவத்தில் சேலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர்

திருக்கல்யாண வைபவத்தில் சேலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர்

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், இன்று, ஆருத்ரா தரிசன உற்சவம் நடப்பதையொட்டி, நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்தது. காலை, 10:30 மணியளவில், உற்சவர் மீனாட்சி  சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம், 12:00 மணியளவில், பெண் பக்தர்கள், மீனாட்சி தாயாருக்கு நலுங்கு வைத்து பூரிப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, 12:30 மணியளவில், வேத மந்திரங்கள் முழங்க, திருக்கல்யாண வைபவம், கோலாகலமாக நடந்தது. அதன்பின், பக்தர்கள், மீனாட்சி  சுந்தரேஸ்வரருக்கு மொய் வைக்கும் படலம் நடந்தது. மூலவர் சிவலிங்கத்துக்கு கற்பூர தீபாராதனை செய்த பின், மதியம்
2:00 மணியளவில், அனைவருக்கும் திருமண விருந்து, பரிமாறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !