உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் ஈஸ்வரன் கோயில் ஆருத்ரா தரிசனம்

பரமக்குடியில் ஈஸ்வரன் கோயில் ஆருத்ரா தரிசனம்

பரமக்குடி, பரமக்குடியில் ஈஸ்வரன் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், எமனேஸ்வரமுடையவர்,நயினார்கோவில் நாகநாதசுாமி கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. ஈஸ்வரன் கோயிலில் உற்சவர் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நடராஜர் புஷ்பக விமானத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !