ஊத்துக்கோட்டை பெருமாள் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3193 days ago
ஊத்துக்கோட்டை: பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை பிராமணத் தெருவில் உள்ளது சுந்தரவல்லி சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவில். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் பெருமாள், ஆண்டாள் திருக்கலயாண உற்சவம் சிறப்பு வாய்ந்தது. ஜன12 முன்தினம் நடந்த இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து உற்சவர் பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.