திருவள்ளூர் தட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம்
ADDED :3332 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர், பூங்கா நகரில் உள்ள யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், வியாழக்கிழமையான ஜன12, காலை 10:00 மணியளவில், குரு பகவானுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. இதே போல், திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ விஷ்ணு கோவில்களில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மணவாளநகர், மங்களீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குரு பகவானை தரிசனம் செய்தனர்.