ஊத்துக்கோட்டை தட்சணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை
ADDED :3192 days ago
ஊத்துக்கோட்டை: தாம்பத்ய தட்சணாமூர்த்தி சன்னிதியில் பக்தர்கள் கொண்டைக்கடலை அணிவித்து தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது, சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். உலகை காக்க வேண்டி ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில் சிவபெருமான், அன்னை சர்வமங்களா மடி மீது தலைவைத்து உறக்கத்தில் உள்ளது போன்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவில் வளாகத்தில் உள்ளது தாம்பத்ய தட்சணாமூர்த்தி சன்னிதி உள்ளது. மற்ற ஊர்களில் உள்ள கோவில்களில், தட்சணாமூர்த்தி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால், இங்கு, மனைவி கவுரியை அணைத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஜன12, வியாழக்கிழமை ஆனதால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. கொண்டைக்கடலை மாலை அணிவித்து, பக்தர்கள் வழிபட்டனர்.