காசி விஸ்வநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை
ADDED :3193 days ago
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, காசி விஸ்வநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், மங்கள வாத்தியங்கள் முழங்க, சுவாமிகளுக்கு சாந்துகட்டளை நடந்தது. தொடர்ந்து பால், பன்னீர், சந்தனம், குங்குமம், திருநீறு, இளநீர் உள்பட, 12 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. முன்னதாக, திருவாதிரை நோன்பையொட்டி, பெண்கள் விரதமிருந்து, மாலையில் படையல் வைத்து, சாமி கும்பிட்டு விரதம் முடித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.