தீபாய்ந்த அம்மன் கோவிலில் 10 கிராமத்தினர் பொங்கல் வைத்து வழிபாடு
ADDED :3192 days ago
திருத்தணி : மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, 10 கிராமத்தினர் குடும்பத்துடன் தீபாய்ந்த அம்மன் கோவிலில், பொங்கல் வைத்து, நேற்று வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், அகூர் பகுதியில் தீபாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 100 ஆண்டு களாக மாட்டுப்பொங்கல் அன்று, அகூர், பாண்டரவேடு, நெமிலி, பெருமாநல்லுார், சொராக்காய்பேட்டை, திருத்தணி உட்பட, 10 கிராமத்தினர் தங்களது குடும்பத்துடன் பொங்கல் வைத்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று, மாட்டுப்பொங்கலையொட்டி, 500க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் வளாகத்தில், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். முன்னதாக மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபட்டனர்.