உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவேட்டீஸ்வரர் கோவிலில் 19ல் கும்பாபிஷேகம்

திருவேட்டீஸ்வரர் கோவிலில் 19ல் கும்பாபிஷேகம்

திருத்தணி : திருவேட்டீஸ்வரர் கோவிலில், வரும், 19ம் தேதி புதிய சிலைகள் பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. திருத்தணி அடுத்த, அகூர் கிராமத்தில், கற்பகம்மாள் சமேத திருவேட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் தற்போது துரித வேகத்தில் நடந்து வருகின்றன. வரும், 19ம் தேதி கோவில் கும்பாபிஷேகம், கோவில் வளாகத்தில் நவகிரகம், தட்சணாமூர்த்தி, பிரம்மா, லிங்கேஸ்வரர், சண்டீஸ்வரர், பைரவர், விநாயகர், அய்யப்பன் மற்றும் பாலமுருகர் போன்ற புதிய சிலைகள் பிரதிஷ்டை நடைபெறுகிறது. நாளை, கோவில் வளாகத்தில் மூன்று யாகசாலைகள், 108 கலசங்களுடன் கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 19ம் தேதி, காலை, 9:00 மணி முதல், 10:00 மணி வரை, சிலைகள் பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !