உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா

விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. திருவள்ளூர், ஜெயா நகர் விஸ்தரிப்பில் அமைந்துள்ள வல்லப கணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று, மாலை, 4:00 மணிக்கு, கோ பூஜையும், தொடர்ந்து, கணபதி ஹோமமும் நடைபெற்றது. பிரார்த்தனை தேங்காய்கள் கட்டும் நிகழ்ச்சியும் நடந்தன. பெரியகுப்பம் தேவி மீனாட்சி நகரில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள காரிய சித்தி கணபதி கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், ஆயில் மில் அருகே உள்ள வெற்றி விநாயகர் கோவில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வழித்துணை விநாயகர் கோவில் உட்பட அனைத்து விநாயகர் கோவில்களிலும், சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. சங்கட நிவாரண ஹோமம்: சோழவரத்தை அடுத்த, பஞ்சேஷ்டியில் நத்தம் (இகணபாக்கம்) கிராமத்தில், ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவிலில் காரிய சித்தி கணபதிக்கு, சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சங்கட நிவாரண ஹோமம் நடந்தது. காலை 10:00 மணி முதல், மதியம் 1:30 மணி வரை, சகஸ்ரநாம அர்ச்சனை, விசேஷ அபிஷேகம் நடைபெறுகிறது. சங்கட நிவாரண ஹோமம் நிறைவடைந்தவுடன், மதியம் 2:00 மணிக்கு, மகா தீபாராதனையும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !