உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் பொங்கல் சிறப்பு வழிபாடு

வீரட்டானேஸ்வரர் கோவிலில் பொங்கல் சிறப்பு வழிபாடு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ மாட்டுபொங்கலை முன்னிட்டு‚ நந்திகேஸ்வரர்க்கு‚ சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில், மாட்டு பொங்கலை முன்னிட்டு, நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 6:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கடஸ்தாபனம், நந்திகேஸ்வரர்க்கு மகா அபிஷேகம், காய்கறி, பட்சணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது. உற்சவ மூர்த்தி சிவானந்தவள்ளி சமேத சந்திரசேகரர் நந்திகேஸ்வரர் முன்பாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதனையடுத்து நந்திகேஸ்வரர்க்கு சோடசோபபச்சார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிவாச்சாரியர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !