பாடலீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ராபிஷேகம்
ADDED :3202 days ago
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ராபிஷேகம் நடந்தது. கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில், தை பொங்கலையொட்டி நேற்று முன்தினம் மாலை அனுக்ஞை, சங்கல்பம், மகந்யாச பாராயணம், கலச பூஜையை தொடர்ந்து பாடலீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் ருத்ர ஜபம் நடந்தது. தொடர்ந்து வசோர்தரா ேஹாமம், பூர்ணாஹூதி, தீபாராதனையும், மூலவருக்கு கலசாபிஷேகமும் நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.