துண்டுக்கருப்பராயர் கோவில் விழா
ADDED :3230 days ago
வால்பாறை: வால்பாறை அடுத்துள்ளது நடுமலை எஸ்டேட் வடக்கு டிவிஷன். இங்குள்ள துண்டுக்கருப்பராயர் சுவாமி, மகாமுனீஸ்வரர், உச்சிகாளியம்மன் சுவாமி கோவிலின், 134ம் ஆண்டு திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. பின் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. விழாவில் வரும், 21ம் தேதி இரவு, 12:00 மணிக்கு சக்திக்கும்பம் அழைத்துவரும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 22ம் தேதி நடுமலை தெற்கு பிரட்டு, விநாயகர் கோவிலிருந்து, சப்பர ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை சென்றடைகிறது. இரவு, 1:00 மணிக்கு சுவாமி எழுந்தருளல், பூஜை, நெய்வேத்தியம் நடைபெறுகிறது. வரும், 23ம்தேதி காலை பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.