உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தீபாராதனை

ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தீபாராதனை

கோத்தகிரி: கோத்தகிரி கடைவீதி ஐயப்பன் கோவிலில் சபரிமலை மகரஜோதியை முன்னிட்டு, சிறப்பு தீபாராதனை பூஜை நடந்தது. காலை, 5:00 மணிக்கு, நிர்மாலயா தரிசனம் அபஷேகம், 6:00 மணிக்கு, உஷபூஜை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமம், அஸ்டாபி ஷேகம், உச்சபூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டத அடுத்து, நடை சாத்தப்பட்டது. மாலை, 5:00 மணிமுதல், மகரஜோதி தீபாராதனை, புஷ்பாபிஷேகம், 7:00 மணிக்கு அத்தால பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று பஜனையில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !